» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் 150 கிலோ ரேசன்அரிசி கடத்த முயற்சி : வாலிபர் கைது

புதன் 27, மே 2020 12:58:57 PM (IST)

தூத்துக்குடியில் 150 கிலோ ரேசன்அரிசி கடத்த முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடியில் ரேசன்அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தாசில்தார் நல்லசிவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தூத்துக்குடி புதுக்கிராமத்திலுள்ள ஒரு ரேசன்கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுமார் 50 கிலோ எடையுள்ள 3 மூடைகளை கடத்தி சென்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் தாமோதரநகரை சேர்ந்த ஜோசப் மகன் அசித் (24) என தெரிய வந்தது . தொடர்ந்து அவரிடம் பறக்கும்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் 3 மாதங்களாக ரேசன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு அதிகளவு அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரிசியை பெரும்பாலான கடைகளில் விற்பனையாளர்கள் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அது போன்ற அரிசி தான் தற்போது கடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து

Renisha shanthiniமே 28, 2020 - 04:46:33 PM | Posted IP 162.1*****

Worst people

VADIVELமே 27, 2020 - 02:48:08 PM | Posted IP 162.1*****

APPO LORRY LA KADATHURAVANGA? NALLA PUDIKIRANGAYA CASU HI HI HI

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory