» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி ஆற்றில் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் : நெல்லை ஆட்சியருக்கு எம்பவர் அமைப்பு மனு

வியாழன் 28, மே 2020 1:39:44 PM (IST)

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதால் மாசு ஏற்படுவதால் அதை தடுக்க நேரடி ஆய்வு செய்ய வேண்டுமென நெல்லை ஆட்சியருக்கு எம்பவர் அமைப்பு காேரிக்கை மனு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி எம்பவர் அமைப்பு செயல் இயக்குனர் சங்கர் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாநகர பகுதியில் பல இடங்களில் உள்ளாட்சிகளின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் உள்ளது. கருப்பந்துறை, கைலாசபுரம், புளியந்தோப்புத் தெரு, வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் சாக்கடை நீர் நேரிடையாக ஆற்றில் கலக்கிறது. 

இதனால் பொதுமக்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் பொதுமக்களும் பெருமளவில் குளிக்கின்றனர். எனவே இத்தண்ணீரை குடிநீராக பயன்படுத்த மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் தான் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. 

ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு, நேரில் மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்து  கழிவு நீர் ஆற்றில் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தி சுத்தமான ஆற்று நீர் குளிப்பதற்கும், மனிதனின் அடிப்படை தேவையான சுகாதாரமான தண்ணீர் குடிப்பதற்கும் பொதுமக்களுக்கு கிடைக்க உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory