» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு: முக்கிய சாலை மூடல்

வியாழன் 28, மே 2020 5:30:24 PM (IST)தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது 

தூத்துக்குடியில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவைச் சேர்ந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் சென்னையில் துக்க நிகழ்ச்சி்க்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சாலைகள் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் இன்று புதிதாக 3 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். சிகிச்சையில் இருந்த அனைவரும் அடுத்தடுத்த குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத்தில் பல நாட்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களால் தூத்துக்குடியில் கரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

Prakashமே 28, 2020 - 10:03:46 PM | Posted IP 162.1*****

Ingu paravavillai vanthavargaluku irukirathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory