» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்

வியாழன் 28, மே 2020 6:38:57 PM (IST)

வில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பேண்டு வாத்திய இசை கலைஞர்கள், வில்லிசை கலைஞர்கள், நாதஸ்வரம் மேளம் நாட்டு புற  கலைஞர்கள் கடந்த 2 மாத காலத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு, 144 தடைஉத்தரவு காரணமாக எவ்வித தொழிலும் செய்யமுடியாமல் வருமானமும் இல்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகின்றனர். மத்திய மாநில அரசும் எவ்வித நிதி உதவியும் வழங்க வில்லை.  எனவே அனைத்து கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ. 10000 வழங்கிடவும், தொழில் செய்வதற்கு திருவிழா மற்றும் இல்ல சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி தொழிலாளர்களின் 2000 மேற்பட்ட குடும்பங்களை பாதுகாத்திட கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.  சிஐடியு நிர்வாகிகள் லெனின்குமார் , கிருஷ்ணன்,  ஆரியமுல்லை,  குருசாமி,  கருப்பையா,  மாரியப்பன், சிபிஎம் கீழப்பாவூர் ஓன்றிய செயலாளர் தங்கம்,கிளைசெயலாளர்மாதவன்  மற்றும் பேண்டு வாத்திய இசை கலைஞர்கள் நிர்வாகிகள்,  நாதஸ்வரம்  மேளம் கலைஞர்கள், சங்கம் வில்லிசை கலைஞர் சங்கம் நிர்வாகிகள்  மற்றும் அனைத்து கிராமிய இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory