» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்

வியாழன் 28, மே 2020 7:27:50 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பூர்ண குணமானதால்  இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 5562பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் இன்று இருவர் பூர்ண குணமானதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று வரை 59 பேர் குணமாகி மருத்துவமனையில் இருந்து தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இன்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து 1180 பேர்களும், சென்னையிலிருந்து 726 பேர்களும், சென்னை தவிற மற்ற மாவட்டங்களிலிருந் 995 பேர்களும் வந்துள்ளனர். அரசு தனிமைப்படுத்தும் முகாம்களில் 166 பேர்கள் உள்ளனர். 2735பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory