» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு

வெள்ளி 29, மே 2020 10:12:08 AM (IST)தென்காசி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தென்காசி மாவட்டத்திற்கான 2020-21 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ரூ3745.36கோடி கடன் வழங்க இலக்கு நிரணயம் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து தென்காசி மாவட்டத்திற்கான 2020-21 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.

கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.3126.91 கோடியும், தொழிற் துறைக்கு 167.93 கோடியும், ஏற்றுமதி துறைக்கு ரூ.10 கோடியும், கல்விக் கடன் வழங்கிட ரூ. 68.79 கோடியும், வீட்டுக் கடன்கள் வழங்க ரூ.102.31 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி துறைக்கு ரூ.24 19கோடியும், சமூக உள்கட்டமைப்புத் துறைக்கு ரூ.8.65கோடியும், இதர துறைகளுக்கு ரூ.236.58கோடியும் ஆக மொத்தம் ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருநெல்வேலி மண்டல முதன்மை மண்டல மேலாளர் ராமநாதன் பெற்றுகொண்டார்.

நிகழ்ச்சியில் நபார்ட் வங்கி உதவி பொது மேலாளர் சலீமா,முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வெற்றிவேல், முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணுவர்தன், முன்னோடி வங்கி அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory