» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி

வெள்ளி 29, மே 2020 10:42:47 AM (IST)

கடையநல்லூர்அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குலாம் மைதீன்  மகன் முகமது அலி (வயது 27). ஓட்டல் தொழிலாளி . இவர் கடையநல்லூர் - காசிதர்மம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முகமது அலி படுகாயமடைந்தார்.

அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  ஆனால் அங்கு சிகிச்சை முகமது அலி  பலனின்றி  பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory