» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது

வெள்ளி 29, மே 2020 12:53:52 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 2148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2974 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 2148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,2974 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 8568 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory