» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

வெள்ளி 29, மே 2020 4:48:55 PM (IST)

சிவகிரியில் வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்து செயின், கம்மல் உள்ளிட்ட 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் 2ம் சந்து பகுதியில் வசிப்பவர் கோமதி மனைவி ராமர் அம்மாள் (72). கோமதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் ராமர் அம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் யாரோ வீட்டிற்குள் புகுந்து ராமர் அம்மாளின் கழுத்தை அறுத்து கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் செயின், காதில் கிடந்த 1 பவுன் கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இன்று காலையில் வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்த போது கதவு பூட்டாமல் இருந்துள்ளது. வீட்டினுள் ராமர் அம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவர் உடனடியாக சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புளியங்குடி டி.எஸ்.பி., சக்திவேல், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory