» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

வெள்ளி 29, மே 2020 5:30:36 PM (IST)


சிவகிரி பகுதி வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் விஜயரங்கபேரி குளம் புரவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் கருப்பசாமி (65) என்பவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். வயல்வெளியில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. நெற்பயிரில் காட்டு பன்றிகள் உருண்டு எழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் சகதியாக மாறி கால்நடை தீவனத்திற்கு கூட ஏற்றதாக இல்லாமல் ஆகிவிட்டது. இதுபோன்று அடிக்கடி காட்டுப் பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேளாண் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சேதமான பயிர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கிடவும், வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துவிடாமல் தடுக்க மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தடுப்பு வேலி அமைக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory