» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் விழ துவங்கியது : பயணிகளுக்கு அனுமதிஇல்லை

சனி 6, ஜூன் 2020 12:46:06 PM (IST)


குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர்விழ துவங்கியது ஆனால் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் 5 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரள மாநிலத்தில் பெய்த மழை காரணமாக தென்னகத்தின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றால அருவிகளிலும் நன்றாக தண்ணீர் விழ தொடங்கியது. ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர் விழ துவங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அருவிக்கரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவே அருவிப்பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory