» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு

புதன் 10, ஜூன் 2020 5:43:11 PM (IST)

திருநெல்வேலியில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பிளஸ்-1 விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 7 மையங்களில் இந்த பணி நடக்கிறது. இதில் 900 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.நேற்று விடைத்தாள் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியை தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அறைகளிலும், பள்ளிக்கூட வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதே போல் பணி முடிந்து சென்ற பிறகும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. நவீன எந்திரம் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பணியை கண்காணித்தனர்.பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை வருகிற 14-ந்தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory