» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னையிலிருந்து தென்காசி வந்தவருக்கு கொரோனா : வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தல்

புதன் 10, ஜூன் 2020 6:26:59 PM (IST)

சென்னையில் இருந்து தென்காசி குத்துக்கல்வலசை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வசிக்கும் பகுதி தடுப்புகள் அமைத்து தனிமை படுத்தப்பட்டது.

சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பி தென்காசி வந்த  இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில்  அவரின் சொந்த ஊரான குத்துக்கல்வல்வலசை  பகுதியில்  அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை வடக்கு ரத வீதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் அவரால் உடனடியாக ஊருக்கு திரும்ப இயலவில்லை. சென்னையிலே இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் அங்கு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி சொந்த ஊரான குத்துக்கல் வலசைக்கு வந்தார்.
 
இதுகுறித்து சுகாதாரத் துறை, வருவாய்த்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் விரைந்து சென்று அந்த இளைஞரை அழைத்துச் சென்று தென்காசி  அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி எனத் தெரிய வந்தது.  இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா, தென்காசி வட்டார சுகாதார அலுவலர் வேலு,  செங்கோட்டை வட்டார சுகாதார அலுவலர் ரகுபதி, குத்துக்கல்வலசை ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் குத்துக்கல்வலசை பகுதிக்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் வீடு உள்ள குத்துக்கல்வலசை வடக்கு ரதவீதி கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த பகுதியை  உடனடியாக தனிமைப்படுத்தினார்கள். அப்பகுதியில்  உடனடியாக கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.மேலும் அந்த இளைஞரின் குடும்பத்தினர் தனிமைப் படுத்தப் பட்டனர்.
 
மேலும் குத்துக்கல்வலசை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்அந்த பகுதி உடனடியாக உள்ளாட்சித்துறை  சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர்களின்  தீவிர கண்காணிப்பில் உள்ளது. அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், வெளிநபர்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

மேலும் குத்துக்கல்வலசையில் டீ கடைகளில் பேப்பர் கப் பயன்படுத்தவேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்தால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஆட்டோ மூலம் விழிப்புணர்வு  பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory