» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வேண்டுகோள்

புதன் 10, ஜூன் 2020 7:33:09 PM (IST)

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலத்தில் திருநெல்வேலி மாநகர காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,காவல் நிலையங்களில் வாஷ்பேசின், சானிடைசர்கள் , மாஸ்க் உபயோகம் , சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை வழக்கமாக்கப்பட்டுள்ளது.

தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக மாநகர எல்லை சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு பிபிஇ கிட் வழங்கப் பட்டுள்ளது. பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு காவல் துறைக்கு ஒத்துழைக்க கோருகிறேன் . பிரன்ட்லைன் ஒர்க்கர் என அழைக்கப்படும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory