» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

வியாழன் 11, ஜூன் 2020 10:17:14 AM (IST)

சிவகிரி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொத்தாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ். இவர் மலேசியாவில் சமையல் மாஸ்டராக பார்த்து வருகிறார்.இவரது மனைவி செல்வி ( 27). இவர்களுக்கு காளீஸ்வரி (5) என்ற மகள் இருக்கிறாள். ராஜ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்து சென்றுள்ளார். செல்விக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வி தனது மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெருங்கோட்டூரில் உள்ள  தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்  . பின்னர் செல்வியை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி அவரை கணவர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். 

இந்நிலையில்  குடும்ப பிரச்சனை காரணமாக செல்வி வீட்டில்  சேலையில் தூக்கு போட்டுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த  செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறிவிட்டனர்.இச்சம்பவம் குறித்து செல்வியின் தந்தை சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory