» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிக்டாக்கில் வன்முறையை தூண்டும் வீடியோ பதிவு : இருவர் கைது

வியாழன் 11, ஜூன் 2020 12:07:48 PM (IST)

டிக்டாக்கில் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர்களான முவின் குமார் (19) முகேஷ் கண்ணன் (20) ஆகியோர் தங்களது மொபைலில் உள்ள டிக்டாக் செயலியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி அவதூறாக பேசி மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து முவின்குமார், முகேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory