» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற நான்கு பேர் : ரூ.4 லட்சம் அபராதம்

வியாழன் 11, ஜூன் 2020 1:13:09 PM (IST)



சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற 4 பேர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. இதனை தடுக்க கோரி வனத்துறையினருக்கு கோரிக்கைகள் சென்றன. சிவகிரி தெற்குப் பிரிவு  கருப்பசாமிகோவில் பீட் வனப்பகுதியில் சிலர் முயல், காட்டுபன்றிகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் சிவகிரி தெற்குப்பிரிவு வனபழகுநர் பூவேந்தன், வடக்கு பிரிவு வனவர் முருகன், வாசுதேவநல்லூர் வனப்பிரிவு வனவர் உபேந்திரன், வனக்காப்பாளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதி கண்ணன், வனக்காவலர் செல்வராஜ், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் கருப்பசாமி கோவில் பீட் வனப்பகுதியில் உள்ள தனியார் தோட்டம் பகுதியில் சென்ற போது அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆத்துவழி கிராமம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமமூர்த்தி (வயது 56), ராமமூர்த்தி மகன் செல்வகுமார் (21), விசுவநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சூரியபிரகாஷ் (27), சண்முகவேல் குடும்பன் மகன் ஜெகநாதகுடும்பன் (53) ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிடுவதற்காக அவர்கள் வந்தது தெரிய வந்தது.மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory