» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கி ஊழியர் உட்பட 16 பேருக்கு கரோனா பாதிப்பு

வியாழன் 11, ஜூன் 2020 6:14:46 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இன்று வங்கி ஊழியர் உட்பட 16 பேருக்கு கரோனா உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 407 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 423 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாளையங்கோட்டையிலுள்ள ஒரு வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக வங்கி மூடப்பட்டது.மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory