» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா : இன்பதுரை எம்எல்ஏ., அறிவிப்பு

வியாழன் 11, ஜூன் 2020 6:29:59 PM (IST)


ராதாபுரம் தொகுதி சீயோன் மலை கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சீயோன் மலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்பீட்டிலான பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.6 லட்சம் செலவில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா ஆகியவை நேற்று மாலை சீயோன்மலை கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் எம்எல்ஏ., இன்பதுரை கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்துவைத்ததுடன்− புதிய பேவர் பிளாக் சாலை பணிக்கு அடிக்கலும் நாட்டினார்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சீயோன்மலை கிராமத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக அரிசி பைகளை இன்பதுரை எம்எல்ஏ  வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory