» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 111 பேருக்கு கரோனா பாதிப்பு : சிகிச்சையில் 23 பேர்

வெள்ளி 12, ஜூன் 2020 10:27:44 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆகவும், குணமானோர் எண்ணிக்கை 88 ஆகவும் உயர்ந்துள்ளது. 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 107 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 1768 பேர், சென்னை நீங்கலாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 1779 பேர், சென்னையில் இருந்து வந்த 1883 பேர் ஆக மொத்தம் 5537 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 5254 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 283 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 8869 பேர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 389 பேர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக சென்னையில் இருந்து வந்தவர்கள்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. 23பேர் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளை வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்தும் இப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory