» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிகிச்சைக்கு செல்ல பணமின்றி தவித்தவருக்கு உதவி : அரசு ஊழியருக்கு அனைவரும் பாராட்டு

சனி 13, ஜூன் 2020 11:15:01 AM (IST)சுரண்டையில் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாமல் 3 மணி நேரம் தவித்தவரை பணம் கொடுத்து அனுப்பி வைத்த கிராம உதவியாளரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை டாக்டர் மேல் சிகிச்சைக்காக பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூறி பரிந்துரை கடிதத்துடன் அனுப்பியுள்ளனர். 

இதனால் பேருந்தில் சென்று விடலாம் என சுமார் 6 மணியளவில் சுரண்டை பேருந்து நிலையத்திற்கு அவரின் தாய் மற்றும் தந்தையுடன் வந்த அவர் பேருந்தில் செல்வது பாதுகாப்பு இல்லாததால் 108 ஆம்புலன்சிற்க்கு அவரது தந்தை போன் செய்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் குமரேசன் பலவீனமான நிலையில் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். 

இதனை பார்த்த அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் வீகேபுதூர் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கிராம உதவியாளர் கணபதி (எ) கணேசனை சம்பவ இடத்திற்கு அனுப்பி நோயாளியை பத்திரமாக‌‌ மருத்துவமணைக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டு 108 ஆம்புலன்ஸிற்க்கும் தகவல் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் இரவு 9 மணி வரை 108 ஆம்புலன்ஸ் வராததால் கிராம் உதவியாளர் கணபதி (எ) கணேசன் காவலர் சமுத்திரக்கனி உதவியுடன் தனது சொந்த செலவில் வாடகை காரை ஏற்பாடு செய்து அதற்கான வாடகையையும் அவசர மருத்துவ செலவுக்காக பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார். நோயாளியின் கஷ்டத்தை கண்டு மனிதாபிமானத்துடன் விரைவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கிராம உதவியாளர் கணபதி என்ற கணேசனை பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory