» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவலர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுரண்டையில் பரபரப்பு

சனி 20, ஜூன் 2020 5:37:13 PM (IST)


சென்னையில் இருந்து சுரண்டை வந்த காவலர் மற்றும் அவரது 2 வயது குழந்தை உட்பட 3 பேருக்கு கரோனா   உறுதியானதால் அங்கு சுகாதார பணிகள் தீவீரம் அடைந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பங்களாச்சுரண்டை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சென்னை திருவல்லிக்கேணியில் போலீசாக வேலை பார்த்து வருகிறார் சென்னையில் குடும்பமாக வசித்து வந்த இவர் கடந்த 14 ம் தேதி சுரண்டைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். பின்னர் வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை உதவியுடன் 18 ம்தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று காலை இவருக்கும் இவரது 2 வயது மகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி சுரண்டை டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன், ஆர்ஐ மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சுகாதார பணிகளை தீவீரபடுத்தி கிருமிநாசினி தெளித்தனர். தெருக்கள் தடுப்பு கம்புகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளன.

அதே போன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்த நிலையில் அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கும் சுகாதார பணிகளை தீவீரபடுத்தி உள்ளனர் இதனை தொடர்ந்து 3 பேர்களையும் திருநெல்வேலி கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory