» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகேந்திரகிரி இஸ்ரோ மைய ஊழியருக்கு கொரோனா : மையம் மூடப்பட்டது

திங்கள் 22, ஜூன் 2020 10:47:55 AM (IST)

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மையம் மூடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்திலேயே உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில்  ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நிரந்தர ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று ஒருநாள் இஸ்ரோ மையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory