» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 26, ஜூன் 2020 5:14:22 PM (IST)


திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 1429 பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில்  மாவட்ட  ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திசையன்விளை வட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்தினை மேற்க்கொண்டார்.

இந்த ஆய்வின் போது  மாவட்ட  ஆட்சியர் தெரிவித்ததாவது:-ஆண்டுக்கு ஒரு முறை வருவாய் தீர்வாயம் நடைபெறும்  இந்த வருவாய் தீர்வாயத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தின் வரவு செலவு கணக்குகள்;, பதிவேடுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும் ஆய்வில் அ பதிவேடு மற்றும் புல அளவு புத்தகங்கள் முறையாக பராமரிக்க படுகிறதா என்பதையும்  கிராம அ-பதிவேட்டில் கிராம இணைப்பு, நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைப் பதிவேடு, குறுகிய கால மற்றும் நீண்ட கால குத்தகைப் பதிவேடுகள், உள்ளாட்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் ஆளுகையில் கொடுத்தல் பற்றிய பதிவேடுகள் முறையாக உள்ளதா எனவும்  புரொவிஷனல் டிமாண்டு பதிவேடு(தற்காலிக சேமிப்பு), வசூல் கணக்குகள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் (ஊராட்சிகளுக்கு மட்டும்), முதியோர் உதவித்தொகை மற்றும் பிற உதவித்தொகை பதிவேடுகள்  பராமரிக்க படுகிறதா  போன்ற பல்வேறு பதிவேடுகள் கணக்குகள் என திசையன்விளை வட்டத்தில் உள்ள 21 கிராம நிர்வாக அலுவலகத்தின் கோப்புகளுக்கு வருவாய் தீர்வாயம்  மேற்க்கொள்ளப்பட்டது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த கை கழுவதல், சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்றவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்  என்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory