» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சீன தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்

வெள்ளி 26, ஜூன் 2020 8:05:23 PM (IST)


சீன தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

எல்லை பகுதியில் சீன‌ ராணுவ தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.இந்நிலையில் எல்லையில் வீரமரணம் அடைந்த  20 ராணுவ வீரர்களுக்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் பால்த்துரை, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் சேர்மச்செல்வம், மோகன் ராஜ், அமைப்பு சாரா அணி பிரபாகர், வர்த்தக அணி சமுத்திரம், இலக்கிய அணி கந்தையா, ஊடகபிரிவு சிங்கராஜ், பரமசிவன், ராஜ்குமார், அரவிந்த், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory