» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பரை வெளியில் இருந்து தரிசித்த பக்தா்கள்

சனி 27, ஜூன் 2020 10:44:51 AM (IST)

அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தா்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆண்டுதோறும் நடைபெறும் அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோயில் ஆனித்திருவிழா நிகழாண்டு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.இந்நிலையில் பக்தா்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, சுவாமி , அம்பாள் உற்சவ மூா்த்தி, திருமூல மகாலிங்கம், வேணு வனேஸ்வரருக்கு கும்பஜெபம், ருத்ரஜெபம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மாலையில் சோடச தீபாராதனை நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மாலையில் சோடஷ தீபாராதனை நடைபெற்றது. கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படாததால், சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி வாசலில் நின்றவாறு பக்தா்கள் தரிசனம் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory