» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியருக்கு பாராட்டு

சனி 27, ஜூன் 2020 5:30:19 PM (IST)


கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த செவிலியருக்கு சுரண்டை காங்கிரஸ் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செவிலியர் பணிக்கு சேர்ந்தார். பின்னர் இவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு பிரிவில் பணி வழங்கப்பட்டது. கொரோனா பணி முடித்து தனிமைப்படுத்தப்பட்டு நேற்று ஊருக்கு வந்தார்.

கொரோனா வார்டில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன், கொரோனா தொற்று உடையவர்களுக்கு சிறந்த சேவை புரிந்த செவிலியர் சங்கீதாவை சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர்  பால்த்துரை, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட துணை தலைவர் பால் (எ) சண்முகவேல், நாட்டாமை ராமராஜ், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் பிரபாகரன், ஊடக பிரிவு சிங்கராஜ், இலக்கிய அணி கந்தையா, யோபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory