» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதியவர் பலி

சனி 27, ஜூன் 2020 7:36:56 PM (IST)


தென்காசி மாவட்டத்தில் முதன்முதலாக சிவகிரியில் கொரோனா தொற்று காரணமாக 77 வயது முதியவர் மரணமடைந்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி காந்தி ரோடு பகுதியில் வசித்த 77 மதிக்கதக்க முதியவர் சிவகிரி பஸ் ஸ்டாண்டில் பூ வியாபாரம் செய்து வந்தார்.கடந்த 23ம் தேதி குருசாமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  24 ஆம் தேதி அவர் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரை மருத்துவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தினர்.இதனையடுத்து அந்த முதியவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் அவர் 25ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரது உடலை 26ஆம் தேதி அடக்கம் செய்தனர். இந்நிலையில் இறந்தவருக்கு கொரோனா இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து அரசுத் துறையினர் வீட்டுக்கு தெரிவிக்க வந்தபோதுதான் இறந்து விட்டதும், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், சிவகிரி தாசில்தார் ஆனந்த்,  சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் லெனின் மற்றும் சுகாதாரத் துறையினர் விரைந்து சென்று காஞ்சி ரோடு பகுதியில்  கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியை தனிமைப்படுத்தினர்.காந்தி ரோடு முதல் சண்முகவிலாஸ் மண்டபம் வரையும் மற்றும் ஜீவாநகர், கோவிந்தன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதிகளில் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும்,வெளியிலிருந்து இப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory