» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விரிவாக்க பணி முடிந்து மரங்கள் அகற்றம் : பொதுமக்கள் அதிர்ச்சி

சனி 27, ஜூன் 2020 8:16:54 PM (IST)

சுரண்டை வீகேபுதூர் ரோட்டில் சாலை விரிவாக்க பணி முடிந்து பசுமை மரங்கள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சுரண்டை அத்தியூத்து ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது‌ இதற்காக அருந்தவபிராட்டி குளக்கரையில் தடுப்பு சுவர் அமைத்து ‌‌‌‌‌‌அகலப்படுத்த பணி நடந்தது. ஆனால் பெரும்பாலான பசுமை மரங்கள் சாலையில் ஓரத்தில் இருந்ததால் அதனை அகற்றாமல் சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்து நடந்து வந்தது.இந்நிலையில் பரன்குன்றாபுரம் விலக்கு முதல் வீகேபுதூர் வரை ரோட்டின் ஓரத்தில் நின்று பச்சை மரங்கள் திடீரென வெட்டி சாய்க்கப்பட்டன. ஆனால் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உள்ள மின்கம்பங்கள் மாற்றப்படவில்லை.

ஏற்கனவே கழூநீர்குளத்தின் வடபகுதியில் சாலை ஓர கிணற்றில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி அகற்றப்பட்டு மீண்டும் வைக்கப்படாத நிலையில் அதற்கு அருகில் உள்ள பாலத்தில் உடைந்த பகுதியை சரிசெய்யாமல் உடைந்த பகுதிக்கு மேல் தார் போட்டு மூடிய பகுதி மீண்டும் உடையும் நிலையில் உள்ளது. பச்சை மரங்கள் வெட்டப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் மீண்டும் ரோட்டின் ஓரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory