» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பெர்னாட் சேவியர் நியமனம்

ஞாயிறு 28, ஜூன் 2020 9:46:48 AM (IST)

தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆய்வாளராக  பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர்  பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து

M.sundaramJun 28, 2020 - 12:31:16 PM | Posted IP 162.1*****

Govt appointed a christian SHO for Santhankulam PS to pacify the people of the area. But most of the SHO of the feather of a same bird. Let us see after 6 months. Now inquiry should be conducted under video conference model and physical presence of people in police station be avoided due to corona pandemic

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory