» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீஸார் தாக்குதலால் வாலிபர் உயிரிழந்ததாக புகார் : விகே புதூரில் மறியல், பரபரப்பு

ஞாயிறு 28, ஜூன் 2020 11:38:38 AM (IST)



சுரண்டை அருகே உள்ள வீகேபுதூரில் போலீஸார் தாக்குதலால் உடல்நலம் குன்றி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார் என கூறி பொதுமக்கள் நள்ளிரவில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் பள்ளிககூடத்தெருவை சேர்ந்தவர் விவசாயி நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன் (25) இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் கடந்த 12 ம்தேதி டாக்டர் அறிவுறுத்துதலின் படி பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பணமின்றி தவித்த நிலையில் கிராம் உதவியாளர் கணபதிதனது சொந்த செலவில் வாடகை காரில் அனுப்பி வைத்தார். அங்கு சுமார் 15 நாட்களாக கிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்களும், ஆட்டோ டிரைவர்களும், உறவினர்களும் சுமார் 400க்கும் மேற்ப்பட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபர் மீது தாக்கியதால் தான் உடல்நலம் சரியில்லாமல் இறந்தார் என கூறி சம்பவத்திற்கு காரணமான எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி  திடீரென இரவு 10 மணியளவில் வீகேபுதூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன் தலைமையில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் டிஎஸ்பிக்கள், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வி மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் 5 கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் போராட்டக்காரர்களை தரப்பில் போலீசார் தாக்குதல் தான் குமரேசன் உடல்நலம் குன்றி உயிரிழந்தார் எனவும் தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வேண்டும், அரசு வேலை வேண்டும், நியாயமான விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், போலீஸார் தரப்பில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க படும், மருத்துவ குழுவின் பிரேத பரிசோதனை மேற்க் கொள்வர், உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெறும் என உறுதியளித்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி வரை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து கலைந்து சென்றனர். 

ஏற்கனவே சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் சுரண்டை அருகே உள்ள வீகேபுதூர் ஆட்டோ டிரைவர் போலீசார் தாக்குதலால் உடல்நலம் குன்றி உயிரிழந்தார் என இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.கள் மீது சந்திரசேகர்,  காவலர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory