» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இறந்தவர்களுக்கு கரோனா உறுதி பொதுமக்கள் அதிர்ச்சி

திங்கள் 29, ஜூன் 2020 10:23:41 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் இறந்த 2 பேருக்கு கரோனா உறுதியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தென்காசி மாவட்டம்  சிவகிரியில் குருசாமி ( 77) என்ற முதியவர்  உயிரிழந்தார் . இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர்தான் அவருக்கு கொரோனா தொற்று  இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் .இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டத்தில் தேவிபட்டணத்தைச் சேர்ந்த ராஜதுரை (83) என்பவர், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராஜதுரை கடந்த 26-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில், ரத்த பரிசோதனை முடிவு 27ம் தேதி வந்ததில் ராஜதுரைக்கு இருப்பது தெரியவந்தது. அவர் உயிரிழந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது .

இதனையடுத்து இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ராஜதுரை  வசித்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளது.  அங்கே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில்  இரண்டு முதியவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு கொரோனா  தொற்று இருந்தது மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிய வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory