» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விகே புதூர் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : உடல் அடக்கம், பலத்த பாதுகாப்பு

திங்கள் 29, ஜூன் 2020 10:42:31 AM (IST)சுரண்டை அருகே போலீஸ் தாக்கியதால் காயமடைந்ததாக கூறப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

சுரண்டை அருகே உள்ள வீகேபுதூர் பள்ளிகூடத்தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன் இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து இவர் கடந்த மே 10 ம்தேதி வழக்கு விசாரணைக்கு வீகேபுதூர் காவல்நிலையம் வந்த போது எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் ஏட்டு குமார் ஆகியோர் தாக்கியதாகவும் அதனால் உடல் பலவீனமான அவர் சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 12ம்தேதி இரவு மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களும் உறவினர்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன், தென்காசி டிஎஸ்பி கோகுல் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர் பின்னர் காலை 4 மணிக்கு மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை உயிரிழந்த குமரேசன் உடல் பிரேத பரிசோதனையை டாக்டர்கள் குழுவினர் செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ‌ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வீகேபுதூர் கொண்டு வரப்பட்டது. இதற்க்கிடையே குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ சந்திரசேகர், ஏட்டு குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வீகே புதூர் பகுதியில் காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன சில டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். தென்காசி எஸ்பி சுகுணாசிங் வீகேபுதூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். 

இந்நிலையில் இறந்த குமரேசன் உடல் வீகேபுதூர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களுடன் எஸ்பி சுகுணா சிங், மற்றும் டிஎஸ்பிக்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் வந்த குமரேசன் உடலுக்கு பொதுமக்களும் உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory