» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : கிருமிநாசினி தெளிப்பு

திங்கள் 29, ஜூன் 2020 11:35:42 AM (IST)சுரண்டையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்திலும் அதன் எதிரொலியாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை சுரண்டையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்க படாத நிலையில் ஓரு புதுமண தம்பதிகள் உட்பட 3 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

இதனால் பேரூராட்சிகளில் மண்டல உதவி இயக்குநர் குற்றாலிங்கம் ஆலோசனை பேரில் சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் ஏற்ப்பாட்டில் சுரண்டையின் அனைத்து பகுதிகளிலும் நவீன எந்திரங்கள் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பஸ் ஸ்டாண்ட், மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மற்றும் சிறிய தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory