» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இ- பாஸ் வாங்கிய பிறகே சாத்தான்குளம் பயணம் : உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திங்கள் 29, ஜூன் 2020 6:45:49 PM (IST)

சாத்தான்குளத்திற்கு முறையாக  இ பாஸ் வாங்கிய பிறகு தான் பயணம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை ,மகன் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த  சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின நேற்று முன்தினம் (ஜூன் 27) தூத்துக்குடி சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார் இந்நிலையில், அவரது இந்தப் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சென்னையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இத்தகைய சூழலில், இ-பாஸ் அனுமதி பெறாமல், உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்று வந்துள்ளார்.இ-பாஸ் பெற வேண்டும் என்ற அறிவிப்பு எல்லோருக்கும் பொதுவானதுதான். இதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. ஆனால், உதயநிதி சட்டத்தை மதிக்காமல், அதனை மீறி பயணித்துள்ளார். இது பொதுப் பிரச்சனை என்பதால் இதுகுறித்து அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இதற்கு விளக்கமளித்து  உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, மெயின் ரோடு  செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டியபிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

அப்படியாJun 29, 2020 - 09:22:39 PM | Posted IP 162.1*****

இ - பாஸ் ல அரசு வேலை, தொழில் பார்க்கிறவங்களுக்கு கிடைக்கும் , ஆமா சும்மா ஊர் சுற்ற பாஸ் ஆஹ் ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory