» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை., கடைகளில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

செவ்வாய் 30, ஜூன் 2020 10:17:17 AM (IST)பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில் நெல்லை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் , பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கடையில் உள்ளவர்களும், கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் முககவசம் அணிந்துள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டார். 

அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பு கொரனா நோய் தடுப்பு நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிப்பதை பார்வையிட்டு  அறிவுரை வழங்கினார் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் உடன் பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory