» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

செவ்வாய் 30, ஜூன் 2020 10:37:41 AM (IST)

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையை  தீவிர படுத்த மாநகராட்சி  கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார்.  பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா பரப்புரையாளர் கனகப்ரியா ஆகியோர் தலைமையில்திருநெல்வேலி அரசு மருத்துவமனை பகுதியில் கொசு ஒழிப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது. 

மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் பிரதேக பாதுகாப்பு உடை அணிந்து புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  மருத்துவமனை வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மூலமாக மருந்து அடித்தனர். மேலும் நவீன இயந்திரம் மூலமாக  கிருமி நாசினியும்  தெளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory