» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் கரோனாவிலிருந்து 342 பேர் டிஸ்சார்ஜ் : சிகிச்சையில் 144 பேர்

செவ்வாய் 30, ஜூன் 2020 10:43:42 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் நேற்று 4 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குணமடைந்தோர் 198 பேர் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.144 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 339 பேர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2938 பேர்கள், சென்னை நீங்கலாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 2841 பேர்கள், சென்னையில் இருந்து வந்த 3525 பேர்கள் ஆக மொத்தம் 9643 பேர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 9207 பேர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 436 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை 17,438 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 581 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இன்று 4 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேர்களும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 35 பேர்கள் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர்.தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மட்டும் 42 பேர்கள் பூரண குணமாகி தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். 144 பேர்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளை வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகுதிகளில் இருந்தும் இப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory