» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விகே புதூரில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி : திமுக நிர்வாகி வழங்கினார்

செவ்வாய் 30, ஜூன் 2020 11:08:42 AM (IST)



வீரகேரளம்புதூரில் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் குமரேசனின் குடும்பத்திற்கு டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ 25,000 நிதியுதவியை அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹை ஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (25). ஆட்டோ டிரைவரான இவர் மீது நிலத்தகராறு சம்பந்தமாக பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த புகாரின் பேரில் வீரகேரளம்புதூர் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசார் குமரேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன், இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்தார்.இதனை அறிந்து டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவரும், மாநில திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பா, பொதுக்குழு உறுப்பினர்கள் சுரண்டை சக்தி, காசிதர்மம் துரை, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கீழச்சுரண்டை முத்துக்குமார், வி கே புதூர் முன்னாள் செயலாளர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலைக்குமார், ஓய்வு பெற்ற உளவுத்துறை உதவி ஆய்வாளர் வீராணம் பழனிச்சாமி, சுரண்டை பேரூர் கழக துணைச் செயலாளர்  பாண்டியன்,  கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டீபன் சத்யராஜ், சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பரமசிவம், கழக உறுப்பினர்கள் வேல்ராஜ், விக்னேஷ், கவிராஜ், முருகேசன், செல்வம், சுரேஷ், சண்முகவேல், ராஜதுரை, குலயநெரி ராஜேந்திரன், ஆனந்த் வடகரை ராமர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory