» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

செவ்வாய் 30, ஜூன் 2020 1:03:46 PM (IST)

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் நீதிபதிகள், உடற்கூறு அறிக்கையின்படி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த வழக்கை நெல்லை சரக டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதன்படி, சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை, சிபிசிஐடி இவ்வழக்கை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பு என்பதால், அவர் தற்போது கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி இன்றே வழக்கின் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory