» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சொக்கம்பட்டி, சிவகிரியில் சூதாட்டம்: 14 பேர் கைது

செவ்வாய் 30, ஜூன் 2020 5:27:24 PM (IST)

சொக்கம்பட்டி மற்றும் சிவகிரி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம்,சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவேட்டநல்லூர் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சட்டவிரோதமாக  சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 9 நபர்களையும், அது போல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயகிரி பகுதியில் உதவி ஆய்வாளர் மாரியப்பன்  ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 நபர்களையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ. 1800 பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory