» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மனு

செவ்வாய் 30, ஜூன் 2020 6:03:14 PM (IST)

மேலப்பாளையம் சந்தையை திறக்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மக்கள் மனு கொடுத்தனர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் கட்சியினர், பொதுமக்கள் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு  வந்தனர். நுழைவு வாசலில் நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-நெல்லை மேலப்பாளையத்தில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு சந்தை இயங்கி வருகிறது. பலருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த இந்த சந்தை கரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த பலர் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

எனவே அரசு மற்ற தொழில்களுக்கு அனுமதி அளித்தது போல் சமூக இடைவெளி, முக கவசம் போன்றவற்றை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் மேலப்பாளையம் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory