» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டீ கடைகளுக்கு நேர கட்டுபாடு விதித்து ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 30, ஜூன் 2020 6:29:52 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு நேர கட்டுபாடு விதித்து  மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஷ், உத்தரவு பிறபித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் போது பல பகுதிகளில் டீ கடைகளில் பொதுமக்கள் அவசியமின்றி அதிகளவில் கூடுவது கண்டறியப்பட்டது. பொது மக்களின் இத்தகைய செயலால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிகழ சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனிவரும் காலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருநெல்வேலி டவுண் நயினார் குளத்தில் இயங்கி மொத்த காய்கறி  வியாபார சந்தை தற்போது வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. மேற்படி காய்கறி சந்தையினை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது. கொரானோ வைரஸ் தொற்று பரவுவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் நடைமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory