» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கு : சிபிசிஐடிவிசாரணை துவங்கியது

செவ்வாய் 30, ஜூன் 2020 6:44:05 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது .

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

டிஐஜி பிரவீண்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தமிழ்ச்செல்வி நீதிமன்ற உத்தரவின்படி மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தார். இந்நிலையில்  தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது .நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் இருந்து ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார். பெற்றுக்கொண்டார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory