» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிராக்டர் பைக் மோதி விபத்து தந்தை, மகள் பலி

செவ்வாய் 30, ஜூன் 2020 8:12:27 PM (IST)

விக்கிரமசிங்கபுரம் அருகே நிகழ்ந்த டிராக்டர் பைக் மோதி விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக பலியானார்கள்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியார்பட்டி பகுதியினை சேர்ந்தவர் ரவி (42). அவருடைய மகள் சுபிட்சா (11). இவர்கள் அம்பாசமுத்திரத்தில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். இதில்  அகஸ்தியர்பட்டி அரசு மருத்துவமனை அருகே மெயின் ரோட்டில் வரும்பொழுது திடீரென நாய் குறுக்கே வந்ததால் அதன் மேல் மோதி எதிரே செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மீதும் மோதியதில்  இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து அறிந்ததும் சம்பவ இடம் வந்த விகே புரம் போலீசார் உடலை கைப்பற்றி  விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory