» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 3 ஐஏஎஸ். அதிகாரிகள் நியமனம்

புதன் 1, ஜூலை 2020 11:17:01 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 3 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 26 சார் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார். அதன்படி  கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றியபிர்தௌஸ் பாத்திமா தென்காசி மாவட்ட கலால்துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை துணை ஆட்சியர் (பயிற்சி) கோகிலா தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் துணை ஆட்சியர் (பயிற்சி) சரவணன் தென்காசி தனித்துணை ஆட்சியராக (சமூகப்பாதுகாப்பு திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிடங்கள் தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டதாகும். இம்மூன்று ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளும் விரைவில் தென்காசி வந்து பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory