» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுத்துறைகளை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள் அச்சம்

புதன் 1, ஜூலை 2020 12:26:11 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் 2 தாசில்தார்கள், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் 2 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் மற்றும் கல்லூரணி வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் மேலநீலிதநல்லூர், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும்; 2 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ., ஒருவர், ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றிய இடங்களை தனிமைப்படுத்தி அங்கு கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரெல்லாம் என கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் வசிக்கின்ற வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அம்மருத்துவமனை மூடப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது. 

ஆனால் அரசு அதிகாரிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் பணியாற்றும் இடங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பது இதர ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அலுவலகங்களுக்கு அவசர தேவைக்காக வரும் பொதுமக்களை பீதி அடைய வைத்துள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அவர்கள் பணியாற்றிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவும் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் முன் வர வேண்டும் என வருவாய்த்துறை, ஊரகத்துறை, காவல்துறை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்திடவும், அச்சத்தில் உள்ள ஊழியர்களின் அச்சத்தை போக்கின்ற வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுத்துறை ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory