» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வனத்துறையினர் தாக்கியதாக 5 பேர் போலீசில் புகார்

புதன் 1, ஜூலை 2020 5:37:35 PM (IST)

புளியங்குடியில் வனத்துறையினர் தாக்கியதாக 5 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தீ பிடித்து எரிந்தது. இதில் பல அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து சாம்பலானது. வனத்துறையினர் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மலை பகுதியில் தீ வைத்தது தொடர்பாக சொக்கம்பட்டியைச் சேர்ந்த காள மாரியப்பன், முருகன், ராமையா, மற்றொரு முருகன், தூசி ஆகிய 5 பேரை புளியங்குடி வனத்துறையினர்  விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் வனத்துறையினர் தாக்கியதாக கூறி 5 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் வனத்துறையினர் மீது புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory