» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விரிவாக்க பணி மின்கம்பங்கள் மாற்றும் பணி தீவீரம்

புதன் 1, ஜூலை 2020 6:07:00 PM (IST)


சுரண்டையிலிருந்து சாலை விரிவாக்கப்பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி தீவீரம் அடைந்துள்ளது.

சுரண்டையிலிருந்து சங்கரன்கோவில் ரோட்டில் ஸ்டேட் பாங்க் வரை ரோட்டை அகலப்படுத்தும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது இதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒருபுறம் மட்டும் விரிவாக்கப்பணி நடந்து சென்டர் மீடியேட்டர் அமைக்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கினால் பணிகள் தாமதமாகின  பின்னர் தாமிரபரணி நீரேற்று நிலையம், கிராமபுற பகுதி, நகர்புற பகுதி என மின்பாதை செல்லும் மின்கம்பங்கள் இருந்ததால் ரோட்டை அகலப்படுத்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்களில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்த ரோட்டை சங்கரன்கோவில் வரை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory