» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் : அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்

வியாழன் 2, ஜூலை 2020 10:22:47 AM (IST)

தென்காசி மாவட்டம் கடையத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் கொரோனா சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் மூலம் ரூ.4.66 கோடியில் 2341 பயனாளிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சிஒன்றிய அலுவகத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் கொரோனா சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் மூலம் ரூ.4.66 கோடியில் 2341 பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி 20 பயனாளிகளுக்கு காசோலை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல்இ வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல். வருமானத்தைப் பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய இரண்டு வட்டாரங்களில் 46 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்கள் மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும் வலிமையும் பெறுவதற்காகவும் பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்கவும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் ரூ.4.66 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் மூலம் தென்காசி மாவட்டத்தில் 2341 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் மற்றும் சிறு வணிகர்களுக்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 846 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கோவிட்-2019 சிறப்பு நிதி கடன் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜலெட்சுமி பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி எம்.எல்.ஏ.. செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகரன், மாநகர் மாவட்டச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவவருமான தச்சை கணேசராஜா, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் குருமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, முதன்மை வருவாய்அலுவலர் பாலகருஷ்ணன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் வேல்முருகன், வட்டார அணி தலைவர் ஜோசப் மற்றும் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory